விருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்
விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு உங்கள் நாள் ஆற்றல் அதிகரிக்கும் நாளாக உள்ளது. நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி ஓரளவுக்கு அனுகூலம் உள்ளது. கணவன் மனைவியிடையே உள்ள பிரச்சனைகள் விலகும்.
குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய அனுகூலமாக நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.
பெண்களுக்கு தந்தை வழி நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலமாக மாறுவார்கள்.
கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கும் வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த நிலையை அடைவார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடையை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.