கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

0
130

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

நாம் எப்பொழுதும் இறைவனை வணங்கும் பொழுது வேண்டிக் கொள்வது நம்முடைய குடும்பம் நலம் பெற வேண்டும் நமக்கு வரும் சோதனைகளை எளிதில் கடந்து செல்ல வேண்டும் அதற்கான தைரியமும் மன உறுதியும் கொடுக்க வேண்டும் என்று தான்.

உன் குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் நிலைக்க குடும்பம் சுபம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த பதிவில் காணும் பரிகாரத்தை தினந்தோறும் செய்ய வேண்டும் என்பது இல்லை.

நமக்கு எப்போது அதற்கான நேரம் கூடி வருகின்றதோ அந்த நாளில் பூஜை செய்யலாம். இந்த பூஜையானது விநாயகருக்கு செய்யக்கூடிய ஒன்றாகும். இந்த பூஜையை சுவஸ்திக் கோலம் சிறப்பு கொண்டது. வெள்ளிக்கிழமையோ மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகருக்கு செய்வது மிக சிறப்பான ஒன்றாகும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்த பிறகு வழக்கம் போல் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும்.

மேலும் அலங்கரித்த பூஜையறையில் விநாயகர் சிலையோ அல்லது விநாயகர் படத்தையோ முன்னில் வைத்து அதற்கு முன்பு சஷ்டி சின்னத்தை நீங்கள் வரைய வேண்டும் பச்சரிசியால் செய்த மாவினால் மட்டுமே இதனை போட வேண்டும். முழுமையான பச்சரிசியில் இதனை போடுவதை விட பச்சரிசி மாவில் இந்த கோலத்தை போடுவது மிக சிறப்பு.

மேலும் இந்த ஸ்வஸ்தி சின்னத்துக்கு நடுவே கொஞ்சம் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துவிட்டு பூக்களால் உங்களுக்கு தெரிந்த அலங்காரம் செய்ய வேண்டும். நமக்கு எதிர்பாராமல் வரவிருக்கும் எந்த ஒரு சோதனையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

 

 

author avatar
Parthipan K