அன்பை 1 நிமிஷத்தில் உடைச்சிட்டீங்க அண்ணா!கதறும் சூர்யா ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு வகையான துறைகள் தங்கள் அன்றாட வேலைகளை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களின் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர்,நடிகையர் போன்ற பலரும் நம் அன்றாட சாமானியர்கள் வாழ்வில் உள்ள மக்களிடம் பெரும் தாக்கத்தை பல காலங்களாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

எனவே கொரோனா காரணமாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதோடு மட்டுமல்லாமல் எந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங்கும் தற்போதுவரை எடுக்கப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே ஷூட்டிங் முடிக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. ஆனால் சில படங்கள் “அமேசான் பிரைம்,நெட்ப்ளிக்ஸ்” போன்ற இணையத்தின் வாயிலாக மக்களுக்கு வெளியிடப்பட்டது. ஆனாலும் சில தரப்பு சார்ந்த மக்களுக்கு அது திரையரங்குகளில் பார்க்கும் மன திருப்தியை கொடுக்கவில்லை என்ற  இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று‘ திரைப்படம் அக்டோபர் 30 அன்று அமேசான் பிரைமில் வெளியாவதாக அப்படத்தின் தயாரிப்பாளரான சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் திரைப்படம் எப்படியும் தியேட்டரில்தான் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது. எனவே இது திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தராது. எனவே ஓடிடி வேண்டாம். தியேட்டரில் படத்தை வெளியிடுமாறு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.
இதில் சில ரசிகர்கள் “அண்ணா உங்க மேல வச்சிருந்த அன்பை ஒரு நிமிஷத்துல உடைச்சுட்டிங்க” என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இன்னும் சிலர் தியேட்டரில் “முதல் நாள் முதல் காட்சி” பார்க்க வேண்டும் என்ற  ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் இப்படி செய்துவிட்டீர்கள் என்று வருத்தத்தைத் தெரிவித்திருந்தனர்.