சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

0
155

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!!

திரையுலகில் ஹீரோக்கள் போல் திகழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் திடீர் கல்யாணம்,சில மாதங்களில் விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்து,திருமணம் செய்து கொண்டு இன்று வரை மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் 10 திரைப் பிரபலங்களின் விவரம் இதோ.

1.அஜித் குமார் மற்றும் ஷாலினி

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித்,’அமர்க்களம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினி அவர்களை காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.

2.சுந்தர்.சி மற்றும் குஷ்பு

90 கால கட்டங்களில் தமிழ் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த நடிகை குஷ்பு அவர்கள்

இயக்குநரும்,தயாரிப்பாளரும்,நடிகருமான சுந்தர்.சி அவர்களை கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.குஷ்பு,சுந்தர்.சி அவர்கள் இயக்கிய படங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

3.சரத்குமார் மற்றும் ராதிகா

 

80,90 காலங்களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகர் சரத்குமார் தன்னுடன் ‘சூர்யா வம்சம்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ராதிகா மீது காதல்

வயப்பட்டார்.இதனை தொடர்ந்து நடிகை ராதிகா,சரத்குமாரை மூன்றாவது கணவராக திருமணம் செய்து கொண்ட நிலையில் சரத்குமாருக்கு இவர் இரண்டாவது மனைவி ஆவார். கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற்றது.

4.பிரசன்னா மற்றும் சினேகா

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி எனப் புகழப்படும் சினேகா தன்னுடன்’ அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார்.

இதனை அடுத்து இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

5.சூர்யா மற்றும் ஜோதிகா

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் சூர்யா அவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார்,சில்லுனு ஒரு காதல், மாயாவி,பேரழகன்,உயிரிலே கலந்தது,காக்க காக்க உள்ளிட்ட படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த ஜோதிகா அவர்களை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

6.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா

 

திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பாக்யராஜ் அவர்கள் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பூர்ணிமா அவர்களை காதலித்து கடந்த 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

7.நாகார்ஜுனா மற்றும் அமலா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா அவர்கள் சினாபாபு,சிவா, பிரேம யுத்தம் மற்றும் நிர்ணயம் ஆகிய படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த அமலாவை காதலித்து கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார்.

8.பகத் பாசில் மற்றும் நஸ்ரியா

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நஸ்ரியா அவர்கள் ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பகத் பாசில் அவர்களை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று திருமணம் செய்து கொண்டார்.பகத் பாசில் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார்.

9.ஆர்யா மற்றும் சாயிஷா

தமிழ் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஆர்யா தன்னுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

10.ராம்கி மற்றும் நிரோஷா

80 கால கட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த ராம்கி தன்னுடன்

‘செந்தூரப்பூவே’ படத்தில் இணைந்து நடித்த நடிகை நிரோஷா அவர்களை காதலித்து கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Previous articleதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!
Next articleஇதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர்