கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா?

Photo of author

By Anand

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா?

சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதிமுக தரப்பில் பாஜக மற்றும் தேமுதிகவுடனான பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே செல்கிறது.இந்நிலையில் சுமூகமாக செல்வதாக கருதிய திமுக கூட்டணியிலும் அதிருப்தி உருவாகியுள்ளது.தொகுதி பங்கீடு விவகாரத்தில் கூட்டணி கட்சிகளை திமுக பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகுவதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் குற்றம்சாற்றியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரச்சாரத்தை ஆரம்பித்த திமுக இந்த முறை 180 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.அதற்கேற்றவாறு கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு தொகுதிகளை வழங்க முடிவு செய்துள்ளது.அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளும், இடதுசாரிகளுக்கு 6 தொகுதிகளும்,மதிமுகவிற்கு 6 அல்லது 7 தொகுதிகளும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 அல்லது 4 தொகுதிகளும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் இது குறித்த பேச்சு வார்த்தைக்கும் இன்னும் அழைக்காமல் இருப்பது சில கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக அழைத்துள்ள இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சு வார்த்தைக்கு விசிகவின் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து கூட்டணி கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.கருணாநிதி தலைவராக இருக்கும் போது கூட்டணி கட்சிகளை இவ்வளவு அலட்சியமாக நடத்தியதில்லை என்றும்,ஸ்டாலினுக்கு தெரிந்து தான் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்றும் அவர்கள் புலம்பி வருகிறன்றனர்.திமுக தலைமை இப்படியே கூட்டணி கட்சிகளை மதிக்காமல் இருக்கும் சூழலில் தனி அணியை உருவாக்கலாமா என்ற கோணத்திலும் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.