கொலை மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்

Photo of author

By Parthipan K

பெலாரஸ் எதிர்க்கட்சி அரசியல்வாதி மரியா கோல்ஸ்னிகோவா உக்ரேனுக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்த முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் எனது தலைக்கு மேல் ஒரு பையை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வியாழக்கிழமை அவரது வழக்கறிஞர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலாரசில் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் மறுதேர்தலுக்கு எதிராக நடைபெற்ற  ஒரு மாத கால போராட்டங்களில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான கோல்ஸ்னிகோவாவை நாடுகடத்தும் முயற்சி டைபெற்றது.
அவர் தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து வெளியேற்றும் முயற்சியைத் தடுத்தார். நாடுகடத்தப்படுவதில் தோல்வியுற்றபோது தனது உயிருக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் இருப்பதாக அவர் ஒரு   அறிக்கையில் தெரிவித்துள்ளார்.