இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்க்கவும்! – கருப்பு பூஞ்சை

Photo of author

By Kowsalya

மியுக்கர் மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பொதுவாக எல்லா இடத்திலும் இருக்கும். இது இப்பொழுது வந்த தொற்று அல்ல. சாதாரண கெட்டுப்போன அனைத்து உணவுகளிலும் பூஞ்சை காளான்கள் வளரத்தான் செய்யும். காற்றிலும் இருக்கும்.

 

ஆனால் இப்பொழுது கருப்பு பூஞ்சை என்பது யாருக்கு வரும்? எதிர்ப்பு சக்தி யார்யார் களுக்கு மிகவும் குறைவாக உள்ளதோ அவர்களை பூஞ்சை தாக்கும்.

 

மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேன்சர் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் , ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

 

இது ஒரு புதிய வைரஸ். வைரஸின் வீரியத்தை குறைப்பதற்காக நாம் ஸ்டீராய்டு மருந்துகளை தருகிறோம். ஆனால் ஸ்டீராய்டு மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சர்க்கரையையும் அதிகப்படுத்தி விடுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தி விடுகிறது. வைரசின் வீரியம் 12 – 14 நாட்களில் குறைந்துவிடும் . ஆனால் நாம் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் சர்க்கரை கட்டுப்பாடு அற்ற நிலைக்கு வந்துவிடும்.

 

இதற்கான அறிகுறிகள் கருப்பு பூஞ்சை தொற்று மூக்கிலும் வரலாம், நுரையீரலிலும் பரவும்.

1. இரவில் திடீரென்று ஒற்றைத் தலைவலி வரலாம். மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலனளிக்காது.

2. ஒரு சிலருக்கு ஒரு பக்கம் முகம் மறுத்து மறுத்து போகும்.

3. மூக்கடைப்பு இருக்கும், மூக்கில் இருந்து மஞ்சள், பச்சை, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தில் சளி வரலாம். இது தான் ஆரம்ப அறிகுறிகள்.

4. இரண்டாம் நிலை கண்களைச் சுற்றி வீக்கம் பெறலாம். கண்கள் புடைத்து வெளிவரும். பார்வை இரட்டிப்பாக தெரியும்.

5. கண்கள் வரை சென்றால் கண்ணையும் இழக்க நேரிடும். மூளை வரை சென்றால் உயிர் சேதத்தை ஏற்படுத்தும்.

 

அறிகுறிகள் சிறிய அளவில் இருந்தால் கூட உடனடியாக காது-மூக்கு-தொண்டை டாக்டரை அணுக வேண்டும். 48 மணி நேரத்தில் இது பரவி விடும். அறிகுறி இருக்கும் பொழுதே டாக்டரிடம் சென்று விட்டால் பூஞ்சையை அகற்றி 21 நாட்களுக்கு இதற்கான பிரத்தியேகமான மருந்தை மூன்று வேளை. ஊசி மூலம் செலுத்த வேண்டும்.

 

இந்த மருந்து வீரியம் மிக்கது என்பதனால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் அதனையும் கவனித்து பயன்படுத்த வேண்டும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மூக்கு கண்கள் மூளை என பரவி தோல் அழுகும் நிலை வரும்.

 

இவ்வாறு ஐசக் ரிச்சர்ட்ஸ்,காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.