தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயங்களை நீங்களே பாருங்கள்!!
தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
- பேரிச்சம் பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்து உள்ளது. குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் இதில் நிறைந்து காணப்படுகிறது.
- தினமும் பேரிச்சம்பழம் ஜூஸ் குடிப்பதினால் உடம்பில் அதிகமாக ரத்தம் உற்பத்தியாகும்.
- ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
- ரத்த சோகை நோய் இருப்பவர்கள் இதை தினமும் சாப்பிட்டு வர ரத்த சோகை நோயிலிருந்து சீக்கிரமாகவே விடுபடலாம்.
- இதயம் பலவீனமாக இருப்பவர்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் ஜூசை குடித்து வர இதயம் பலம் பெறும்.
- கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.
- மேலும் மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை பாதுகாக்கும்.
- உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
- பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்து உடனடியாக விடுபடலாம்.
- பேரிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய மாங்கனிஸ் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அனைத்தும் உடம்பில் இருக்கக்கூடிய எலும்புகளை நன்கு வலுப்பெற வைக்கும்.
- குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்புருக்கி நோயை தடுத்து எலும்பு தேய்மானம் அடைவதில் இருந்து பாதுகாக்கும்.
- தொடர்ந்து பேரிச்சம்பழம் ஜூசை குடிக்கும்போது கண் பார்வை சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையுமே ஏற்படாது.
- மேலும் இதில் உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜியை சரி செய்யும் சக்தியும் உள்ளது.
- பெண்கள் பலருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் ஒழுங்கற்ற மாதவிடாய் எனவே தினமும் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனை அனைத்தும் சரியாகும்.
- நரம்புத் தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம்பழம் ஜூசை குடித்து வர உடனடியாக சரியாகும்.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இந்த பேரிச்சம் பழம் ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் இந்த பேரிச்சம் பழம் ஜூசை எடுத்துக் கொண்டால் மூளையும் உடம்பும் நன்கு சுறுசுறுப்படையும்.
- ஞாபகம் வருது. பிரச்சனை இருப்பவர்கள் இந்த பேரிச்சம்பழம் ஜூசை குடித்து வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை நன்கு அதிகரிக்கும் எனவே இந்த பேரிச்சம் பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தாராளமாக சாப்பிட்டு வரலாம்.
நீங்கள் பேரிச்சம் பழத்தை ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் தினமும் இரண்டு பேரிச்சம்பழத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டு வர உடம்பில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை இது குணப்படுத்தும்.