Breaking News

நடிகர் வடிவேல் போல் ஏரி காணவில்லை கண்டு பிடித்து தரக்கோரி கிராம மக்கள்மனு!

நடிகர் வடிவேல் போல் படப்பாணியில் ஏரியை காணவில்லை கண்டு பிடித்து தாருங்கள் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த கிராம மக்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிகுளம் கிராமத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த இரண்டு ஏக்கர் பரப்பளவிலான ஏரியை காணவில்லை.

15 ஆண்டுகளாக காணாமல் போன ஏரி தற்போது தரிசு நிலமாக உள்ளது எனவும் இதனை மீட்டு ஏரியை புணரமைத்தால் பொன்னாற்று பாசன வாய்க்காலின் மூலம் ஏரியில் நீர் நிரப்பலாம் எனவும் கூறினர்.

எனவே இந்த ஏரியை கண்டுபிடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.