இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!

0
298

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்துகொண்டு இருக்கின்றன. நோய் தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல் கடந்த மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யாமல் இருந்த இந்த நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் மூன்றாவது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 08 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 93 ரூபாய் 38 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleஇந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!
Next articleஎங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here