ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு! நடவடிக்கைகள் தீவிரம்!

Photo of author

By Sakthi

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களை தனிமைப்படுத்த அவர்களுக்கு தனி அறை உண்டாக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளி திறப்பதற்கு தமிழக அரசு தயாராகி வரும் நிலையில் பள்ளிகளைத் திறந்தபின்னர் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. பல மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களும் நேரடி வகுப்புகளில் அமர்ந்து பாடம் கற்பிப்பதற்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். புதுவையிலும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் ஆரம்பிக்கப்படும் என்று நேற்றைய தினம் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த சூழ்நிலையில், மதுரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நேற்றைய தினம் நடந்த இந்த கூட்டத்தில் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்.அந்த சமயத்தில் பேசிய ஆணையர் கார்த்திகேயன் எல்லா பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் முதல் பணியாளர்கள் வரையில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பள்ளிகளின் நுழைவாயிலில் மாணவர்கள் கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் அங்கேயே மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருப்பதையும் .சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்ட இருக்கின்ற வழிகாட்டு நெறி முறைகளை தவறாமல் எல்லோரும் பின்பற்ற வேண்டும் காய்ச்சல், இருமல், சளி, போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் மாணவர்களை தனிமைப் படுத்துவதற்காக தனி அறையை உண்டாக்க வேண்டும் .அவர்கள் உடனடியாக அருகில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையர் கார்த்திகேயன் வலியுறுத்தி இருக்கின்றார்.

அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் திறப்பு காண ஏற்பாடுகளும் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அதே சமயம் நாட்டில் அக்டோபர் மாதம் 3 வது அலை வேகமெடுக்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.