செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்!

0
143
September 5th Need to Choose! Exam center that shocked students!
September 5th Need to Choose! Exam center that shocked students!

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகாளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் அச்சுறுத்தலால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதிக தொற்று உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தினர்.மேலும் கொரோனா அதிகளவு பரவும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.பத்து மற்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அராசாங்கம் ஆள் பாஸ் செய்தது.

நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் வருடம் நடந்து வருகிறது.முதல்வர் முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு மோடியை நேரில் சந்திக்க சென்றார்.அப்போது அவரிடம் கொடுத்த மனுவில் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.அதற்கான பதில்கள் ஏதும் இன்றளவும் வரவில்லை.மக்களும் நீட் தேர்வு நடத்துவது குறித்து பல கேள்விகள் எழுப்பி வந்தனர்.இந்த நீட் தேர்வுகள் நடத்தப்பட்டால் மீண்டும் கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவும் என்பதால் நீட் தேர்வு நடத்த வேண்டாம் என பல தரப்பினரும் கூறி வந்தனர்.

அவ்வாறு கூறி வந்த நிலையில் இளங்கலை நீட் தேர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி என அறிவிப்பு வெளிவந்தது.நீட் தேர்வின்  ஆரம்பிப்பதற்கு முன்னே 60 நாட்கள் இடைவெளி காணப்படும்.அந்த இடைவெளியானது தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையங்களை அமைக்கவும் மற்றும் தேர்வு அறைகளை ஏற்படுத்தவும் அந்த கால அவகாசத்தை பயன்படுத்திக்கொள்வர்.

ஆனால் திடீரென்று செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டதாக ஓர் செய்தி வந்தது.அச்செய்தி வெளியாகிய ஓரிரு நிமிடங்களிலேயே சமூக வலைத்தளத்தில் வைரலாக தொடங்கிவிட்டது.இந்த செய்தியை பார்த்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவு அதிர்ச்சியடைந்தனர்.ஆனால் ஓரிரு நேரங்களிலேயே இந்திய தேர்வு மையத்தின் இயக்குனர் வினித் ஜோஷி இது போலியான தகவல் என கூறிவிட்டார்.இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.

Previous articleதோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்!
Next articleகாதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!