கண்ணீருடன் வீடியோ பதிவிட்ட சீரியல் நடிகை!! கணவரின் பிரிவால் துக்கமா??

0
117
Serial actress who posted a video with tears!! Are you sad because of the separation of your husband??
Serial actress who posted a video with tears!! Are you sad because of the separation of your husband??

கண்ணீருடன் வீடியோ பதிவிட்ட சீரியல் நடிகை!! கணவரின் பிரிவால் துக்கமா??

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான ஒரு பிரபலமான சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சீரியலில் நடித்த ஹீரோயின் தான் நடிகை ரக்ஷிதா ஆவார். இவர் சின்னத்திரையில் பெரிய அளவில் வளர்ந்ததற்கு காரணமே இந்த சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

இதற்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். நடிகை ரக்ஷிதா தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண பந்தம் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. சமீப காலமாகவே இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் தனது கணவர் ஆபாச வார்த்தைகள் பேசியதாக கூறி அவர் மீது ரக்ஷிதா புகார் அளித்திருந்தார்.

இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இவர் பிக் பாஸில் இருந்து வந்த பிறகு இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

இதுவரை ரக்ஷிதாவும் அவரது கணவரும் தினேஷும் தனியாகவே வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், ரக்ஷிதா தற்போது தான் கடந்து வந்த பாதைகளை கூறும் விதமாக கண்ணீருடன் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த இவரின் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். கணவரின் பிரிவால் இவர் சிரமப்பட்டு வருகிறாரா என்று அனைவரின் மத்தியிலும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

Previous articleதனுஷுக்கு ஜோடியாகும் வாரிசு பட நடிகை!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!
Next article விளைநிலங்களை அழித்து கால்வாயா?? என்எல்சி-யின் அட்டூழியம் தலைவர்கள் கண்டனம்!!