தொடரும் நூதன கொலைகள் – அதிர்ச்சியில் மக்கள்

0
173

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த மார்ச் மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார்.

இதற்கிடையே கடந்த மே மாதம் 6-ஆம் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அஞ்சல் பகுதிக்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டில் தங்கினார்.

அன்று இரவின் போது மறுபடியும் உத்ராவை பாம்பு கடித்து மயங்கிய நிலையில் இருந்தார்‌. உத்ரா இருந்த அறையில் இருந்த பாம்பும் அடித்துக்கொல்லப்பட்டது.

உயிருக்கு போராடிய நிலையில் உத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்ராவின் சாவில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். உத்ரா இறந்த பின்பு அவரது கணவர் சூரஜின் நடவடிக்கையில் சில மாற்றத்தை போலீஸார் கவனித்தனர்.

இதையடுத்து சூரஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சூரஜ் வரதட்சணைக்காக அவர் மீது பாம்பை ஏவி விட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

சமீபத்தில் நூதன கொலைகள் கேரளாவில் நடக்கின்றன. சூப்பில்(Soup) சைனடு வைத்து ஒரு குடும்பத்தையே கொன்ற பெண்ணின் கொடூர செயல் கேரளா மாநிலத்தை உலுக்கியதை போல, விஷப்பாம்பை ஏவி மனைவியை கொலை செய்த கணவனின் செயலும் தற்போது அம்மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Previous article12ம் வகுப்பு பொதுத் தேர்வு – போனஸ் மதிப்பெண்கள் அறிவித்த தேர்வுகள் இயக்கம்
Next articleபுல்வாமா போல தீவிரவாதிகள் திட்டமிட்ட மற்றொரு தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிப்பு