துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்

0
126

துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் வாடிக்கையாளர் சேவை மையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சுய சேவை மையங்களாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதில் அந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் பயன்படுத்தப்படும் ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பங்கள் மற்றும் எந்திரங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் அரசின் ‘அனைவருக்குமான நகரம்’ கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சேவைகளும் எளிமைப்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த மையங்களில் ‘ரோபோ’ எந்திரம் மூலம் மாற்றுத்திறனாளிகளிடம் தகவல் தொடர்பை எளிமையாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காணொலி காட்சி மூலம் அதிகாரிகளை இருக்கும் இடத்தில் இருந்தே தொடர்பு கொண்டு பேசும் முறை மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ‘ஸ்மார்ட்’ சேவைகளுக்காக ஆணையத்தின் சார்பில் 4 ஆயிரத்து 458 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதில் கூடுதலாக காதுகேளாதோருக்காக 22 சைகை மொழியில் பதிலளிக்கும் வகையில் பயிற்சி பெற்ற ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே மேற்கண்ட சேவைகளை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Previous articleபோதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை!
Next articleஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !!