“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!!

Photo of author

By Rupa

“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த உரையை வாசிக்காமல் தானாக சித்தரித்த உரையை வாசித்ததால் அவர் பேசி முடித்ததும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆர் என் ரவியை விமர்சனம் செய்ததை யொட்டி அவையை விட்டு ஆளுநர் உடனடியாக வெளிநடப்பு செய்தார்.

மேலும் சட்டப்பேரவையில் ஆளுநர் விருந்தினர் ஒருவர் சிறப்பு விருந்தினர் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், அங்கு நடக்கும் அனைத்தையும் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதனை அங்கிருந்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவையை அவமதித்து உரிமை மீறல் நடந்துள்ளது என கூறினார்.

இதற்கு சபாநாயகர் அப்பாவு அவையில் உரிமை மீறல் இருப்பதாக கூறுவதால் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவை உரிமை குழுவிற்கு உத்தரவிட்டார். அந்த வகையில் அவை உரிமை குழுவின் தலைவராக துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ள நிலையில், அந்த அவையின் முன்னவர் துறைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இன்று அறிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் இந்த குழுவில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன், இனிக்கோ, இதயராஜ், சௌந்தரபாண்டியன், நல்லதம்பி, ஈஸ்வரப்பா, பிரின்ஸ் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். அவையில் அங்குள்ள கட்டுப்பாடுகளை மீறி வீடியோ எடுத்ததால் உரிமை மீறல் அடிப்படையில் ஆளுநரின் விருந்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து தமிழ்நாடு தமிழகம் என்று ஆளுநர் கடிதத்தின் மூலம் வரும் சர்ச்சையே தற்பொழுது வரை குறையாத நிலையில் மீண்டும் ஆளுநரின் விருந்தினரால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது ஆர் என் ரவிக்கு அடுத்தடுத்து குடைச்சலை தமிழக அரசு கொடுப்பது போல் உள்ளது.