இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் தயாராக இருப்பார்… பாகிஸ்தான் அணிக்கு நல்ல செய்தி!

Photo of author

By Vinoth

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் தயாராக இருப்பார்… பாகிஸ்தான் அணிக்கு நல்ல செய்தி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது ஷாகீன் அப்ரிடி காயத்தில் விலகியது. இதையடுத்து இப்போது அவர் டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பீல்டிங் செய்யும் போது ஷாஹீன் முழங்காலில் காயம் அடைந்தார், அதைத் தொடர்ந்து அவர் 6 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழல் உருவானது. அவர் உடனடியாக சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்று சிகிச்சைப் பெற்றார். ஆனால் இப்போது டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் அவர் உடற்தகுதிக்கு தகுதியாக உள்ளார் என்ற நம்பிக்கையுடன் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதுபற்றி பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, டி20 உலகக் கோப்பைக்கு 110 சதவிகிதம் பொருத்தமாக இருப்பதாக ஷாகின் அப்ரிடியுடன் சமீபத்தில் பேசியதாகவும், அவர் “போருக்கு தயாராக” இருப்பதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியின் போது ஷாகீன் அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.