”கோஹ்லி சிறந்த கேப்டன் எல்லாம் ஒன்னுமில்ல… “ முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கருத்து

0
100

”கோஹ்லி சிறந்த கேப்டன் எல்லாம் ஒன்னுமில்ல… “ முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு கேப்டன் பதவியை விட்டு விலகினார்.

இந்திய அணிக்கு 2016 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்றுக்கொண்ட விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக அணியை வழிநடத்தினார். ஆனால் அவர் தலைமையில் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழ, இந்த முடிவை எடுத்தார்.

இப்போது மீண்டும் அணிக்குள் ஒரு வீரராக தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுத்து விளையாடி வருகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் வின்ஸ்டன் பெஞ்சமின் கோஹ்லி பற்றி பேசும் போது, “அவரை சிறந்த இந்திய கேப்டன் என்று கூறுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். கோஹ்லி தனது பேட்டிங்கிலும், விளையாடுவதிலும் அதிக கவனம் செலுத்துவதை பார்க்க விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன். நான் இதுவரை கண்டிராத சிறந்த இந்திய பேட்டர்களில் ஒருவராக அவர் இருக்கப் போகிறார்.

அவரை மிகச்சிறந்த கேப்டன் என்று என்னால் சொல்ல முடியாது. அவருக்கு முன் உங்களுக்கு சில கேப்டன்கள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் தந்திரோபாயத்தில் கொஞ்சம் சிறந்தவர்கள். அவர்களில் ஒருவர் என்று என்னால் சொல்ல முடியும்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் “ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் பந்து வீச்சில் முன்னணியில் இருப்பதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல ஆண்டுகளாக நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்குள் ஏராளமான இளம் திறமையாளர்கள் உள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.