ஆட்சியை பிடிப்பதற்கு நடந்த துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த இரு காவலர்கள்!

0
76
Sudden shooting by mysterious people! This is the party in the background ..!
Sudden shooting by mysterious people! This is the party in the background ..!

ஆட்சியை பிடிப்பதற்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த 2 பணி  காவலர்கள்!

சட்டமன்ற தேர்தலானது இந்த முறை ஐந்து மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்குகிறது.இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சடன்மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் இன்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்க உள்ளது.

மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட தக்கது.திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் வேட்பாளர் மற்றும் தற்போதைய முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அதனைத்தொடர்ந்து  இன்று மேற்கு வங்கத்தின் தேர்தலானது  8 கட்டமாக நடைபெறும்.அதன் முதற்கட்ட தேர்தலானது இன்று தொடங்கியது.

இந்நிலையில் பகவான்பூர் தொகுதியில் வாக்கு பதிவு தொடங்கும் முன் அங்கிருக்கும் மக்களை  மிரட்டியதாக தகவல் வெளியானது.அதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த 2 பனி காவலர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்போது அந்த பணியிலிருந்த வீரர்கள் காயமடைதுள்ளனர்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இவ்வாறு நடந்துக்கொள்வதாக பாஜக தரப்பினர் கூறிவருகின்றனர்.துப்பாக்கி சூட்டினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.