Breaking News

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்!

Shakti Matriculation School re-opening? Students and parents flock to the collector's office!

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்!

கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு போராட்டம்  நடத்தினார்கள்  அந்தப் போராட்டமானது மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தில்  பள்ளியின் வளாகம் சூறையாடப்பட்டது .

இந்நிலையில் சக்தி பள்ளியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் ,பெற்றோர்கள் குவிந்தனர்.இந்த சம்பவத்தில் சக்தி மெட்ரிக் பள்ளி ,சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும்  மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

Leave a Comment