நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?.

0
115
The young man who saved the dog who was drowning in the water! The pity of the helper?
The young man who saved the dog who was drowning in the water! The pity of the helper?

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?.

இங்கிலாந்தில் உள்ள நார்விச் படகு நிலையத்தில் பென்ட்லி என்ற நாய் ஒன்று படகின் ஓரத்தில் இருந்து நின்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் தண்ணீரில் விழுந்தது.அப்பகுதி வழியாக தினமும் ஜிம்மிலிருந்து வழக்கம் போல் ரீஸ் என்பவர் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது நீரில் தத்தளித்த நாயை கண்டார்.அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அதன் அருகில் சென்றுள்ளார்.எந்த பயமும் இல்லாமல் ஒரு வித தயக்கமும் இல்லாமல் ரீஸ் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு அந்த நாயை காபாற்ற ஆற்றில் குதித்துள்ளார்.

அப்போது நாயின் உரிமையாளர் ஒருவர் தயவு செய்து உதவுங்கள் எனது நாயை காப்பாற்றுங்கள் அது நீரில் மூழ்கப் போகிறது என கத்தியுள்ளார்.அவர் கத்தியதை கேட்ட ரீஸ் விரைந்து தண்ணீரில் முழ்கிய நாயை காப்பாற்றி விட வேண்டும் என வேகமாக செயல் பட்டார்.ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடந்து விட்டது.

நீரில் மூழ்கி கொண்டிருந்த நாயை காப்பாற்றும் போது ரீஸ் கண்களுக்கு அருகே அந்த நாய் கடித்து விட்டது.இதனால் அவருக்கு ரத்தம் கசிய தொடங்கியது.இதையும் பொருட்படுத்தாமல் அவர் நாயை லாபகமாக கையாண்டு நாயை கரைக்கு கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

பின் நாயின் உரிமையாளர் ரீஸ்யை  மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் சிகிச்சை செய்தார் .அப்போது அவர் ரீஸ்யை  கேட்ட போது நான் வளரும் போதே என் அம்மா உள்ளூர் விலங்குகள் தங்குமிடம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.எனவே எங்களிடம் நாய்கள்,பூனைகள்,முயல்கள்,புறாக்கள்,வான்கோழிகள் என பல வகை விலங்குகள் இருந்தன.

எங்களிடம் இருந்த எந்த செல்ல பிராணிகளும் எங்களை காயப்படுத்தியதில்லை என்று கூறினார்.இந்த நிகழ்விற்கு பிறகு அந்த நாயின் உரிமையாளரான  ஜெட் லானிகன்மற்றும் ஜேக்கப் வில்லியம்ஸ் ஆகியோர் தங்கள் நாயை காப்பாற்றிய உதவிய ரீஸ்க்கு நன்றி தெரிவித்து கொண்டனர்,இந்த சம்பவம் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

author avatar
Parthipan K