இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!!
சிறந்த எதிர்கால முதலீடாக உள்ள தங்கம் காயின், பார் மற்றும் நகையாக விற்பனையாகி வருகிறது. அவசரத் தேவைக்கு தங்கத்தை தவிர வேறு எவையும் உதவாது என்பதினால் சாமானியர்கள் தங்களால் முடிந்த அளவு தங்கத்தை சேமித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக தங்கம் மளமளவென அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,860 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் உயர்ந்து இருக்குறது.
அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,875க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,000க்கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.54 உயர்ந்து ரூ.6,409க்கும், சவரனுக்கு ரூ.432 உயர்ந்து ரூ.51,272க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80.50 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை சில தினங்களாக அதிகரிக்கத் தொடங்கி இருப்பது இல்லத்தரசிகளை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.