வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்! அமலுக்கு வரும் வேக கட்டுப்பாடு மீறினால் அபராதம்!!
சாலை விபத்துக்கள் அதிகளவு நடைபெறும் பட்டியலில் தமிழகம் 10 இடங்களுக்குள் இருக்கும் பட்சத்தில் தற்பொழுது இது குறித்த கட்டுப்பாட்டை தீவிரப் படுத்தி உள்ளனர். 2003 ஆம் ஆண்டு வாகனங்கள் சாலையில் இயங்குவதற்கு வேக கட்டுப்பாடு வரம்பு என்பதை நிர்ணயம் செய்தனர். ஆனால் அது முறையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில் தற்போது மீண்டும் அதனை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 62 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்குகின்றது. இவ்வாறு செல்லும் வாகன ஓட்டுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்பொழுது வேக கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்துள்ளனர். அந்த வகையில் இரவு 10 மணி என தொடங்கி காலை 7 மணி வரை இருசக்கர வாகனங்கள் அனைத்தும் 50 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லலாம் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காலை 7:00 மணி முதல் இரவு பத்து மணி வரை 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்த வேக கட்டுப்பாடு குறித்து சமீபத்தில் காவல் ஆணையர் அறிவுறுத்தியும் பலர் எதிர்ப்பை தான் தெரிவித்தனர். பகல் நேரங்களில் எப்படி நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்ற கேள்வியை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் 6 பேர் கொண்ட குழு அமைத்து இதுகுறித்து ஆலோசனை செய்தார். அவ்வாறு ஆலோசனை செய்த இறுதி முடிவுக்கு தமிழக அரசானது தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த ஒப்புதலின் அடிப்படையில் எந்த நேரத்திலும் இலகு ரக வாகனங்கள் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று கூறியுள்ளனர். அதுவே கனரா வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல குடியிருப்பு பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அனைத்து 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
2003 ஆம் ஆண்டு இரண்டு சக்கர வாகனங்களுக்கு 40 கிலோ மீட்டர் என்று வரையறுக்கப்பட்ட நிலையில் இந்த குழு ஆலோசனை மூலம் பரிந்துரையின் பெயரில் தற்போது இருசக்கர வாகனங்கள் 50 கிலோமீட்டர் வரையும்,ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் வரையும் செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த புதிய வேக கட்டுப்பாடு திட்டமானது வரும் நான்காம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளனர்.மேற்கொண்டு இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.