வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!!

0
70
#image_title

வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!!

பிரபல மெசென்ஜர் செயலியான வாட்ஸ்ஆப் செயலியில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதற்கு பிறகு பல மாற்றங்களை மெட்டா நிறுவனம் செய்து வருகின்றது. புது புது இன்டர்ஃபேஸ் வசதி, வாட்ஸ்ஆப் சேனல் வசதி, பணம் அனுப்பும் வசதி என்று பல்வேறு புதிய வசதிகளை மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படங்களை வைத்துக் கொள்ளும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் பயனர்கள் தங்களின் தொடர்புகளில் இருப்பவர்களுக்கு தனியாக ஒரு தன்முகப்பு படம் வைத்துக் கொள்ள முடியும். மேலும் தங்களுடன் தொடர்புகளில் இல்லாதவர்களுக்கும் மாற்று தன்முகப்பு படத்தை வைத்துக் கொள்ள முடியும்.

இது குறித்து வாட்ஸ்ஆப் பீட்டா இன்போ என்ற இணையதளம் “வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தும் பயிர்களின் தனியுரிமைக்கும் பாதுகாப்புக்கும் இது ஒரு அரணாக இருக்கும்” என்று கூறியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் ஆகிய தளங்களில் உள்ள பயனர்கள் பெயர் போல வாட்ஸ்ஆப் செயலியில் பயனர் பெயர் அமைப்பது தொடர்பான சோதனை நடைபெற்று வருகின்றது எனவும் தகவல் கிடைத்து இருக்கின்றது.

தற்பொழுது மொபைல் எண் மட்டுமே மற்றொரு பயனை தெடர்பு கொள்ள வாட்ஸ்ஆப் செயலியில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயனர் பெயர் வசதியை குண்டு பெயரை தேடி அந்த நபரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த வசதி தற்பொழுது டெலிகிராம், இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் ஆகிய செயலிகளில் இருக்கின்றது.