மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

0
155

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன.

அந்த நாட்களுக்கு ஈடு செய்யும் பொருட்டு நாளை 28-01- 2023 பள்ளிக்கு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் செவ்வாய்க்கிழமை பாட வேளையை பின்பற்றி முழு நாளுக்கும் பள்ளி செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து  பெய்து வந்த பெருமழை காரணமாக சில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்யும் பொருட்கள் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாகும். வியாழக்கிழமை பாட வேளையினைப் பின்பற்றி முழு நாளாக கருதி செயல்படுமாறு அறிவிக்கப்படுகிறது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleசெல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்!
Next articleகோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!