நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!!

0
240
#image_title

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!!

சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். தங்கத்தை காயினாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்க காரணம் அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் என்பதினால் தான். அதனால் தான் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.

இதன் விலை ஏறினாலும், இறங்கினாலும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடு இல்லை. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,795 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் உயர்ந்து இருக்குறது.

அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.5,835க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.6,365க்கும், சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.50,920க்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.80.20 காசுக்கும் 1 கிலோ வெள்ளி ரூ.80,200க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.