ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!!

Photo of author

By Parthipan K

ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!!

Parthipan K

Shocking news that O. Panneerselvam's photo has been removed !!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!!

சென்னையில் அதிமுகவின் புதிய பரபரப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்படும் அல்லது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

நமது அம்மா நாளிதழ் தாளில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் நிறுவனர்கள் பெயர்களாக பதிப்பில் இருக்கும் .வரும் சனி கிழமையை அடுத்த நாள் அந்த பதிப்பில் நிறுவனர் பெயராக எடப்பாடி பழனிச்சாமி பெயரை மட்டும் உள்ளிட்டனர். பொதுக்குழுவிற்கு பிறகு வெளியான பதிப்புகளிலும் இந்த நிலையே தொடர்ந்து வந்தது.நாளிதழ் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கருத்துகளால் நிரப்பப்பட்டுள்ளது.

அதில் ஈபிஎஸ் தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் கூறியதையும், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் பேட்டி ஆகியவைகளே முதல் பக்கத்தில் நிறுவப்பட்டது.அனைத்து அலுவலங்களில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றி வருகின்றனர்.கடந்த 23-ந் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் அக்கட்சியானது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளாக மீண்டும் பகிரங்கமாக பிளவுபட்டது.

அப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் உருண்டைகள் வீசப்பட்டன. பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தன் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து ஓ பன்னீர்செல்வம் வெளியேறினார்கள்.ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்துடன் இத்தகைய கூட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.

ஆனால் இருவரது கையெழுத்தில்லாமல் அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.மேலும் அனைத்து தீர்மானங்களும் இதனால் ரத்து செய்யப்பட்டது.ஜூலை 11-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.