தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Photo of author

By Amutha

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Amutha

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.

சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது கணவருக்கும் சகோதரிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சந்தேகம் கொண்டிருந்தார்.

இதையடுத்து இந்த பிரச்சனையின் காரணமாக சகோதரிகள் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்று உள்ளது.

அப்போது திடீரென  ஆத்திரத்தில் மதியிழந்த சோனு தனது தங்கை சுமைலாவை நோக்கி அவரது முகத்தில் துப்பாக்கியால் சுட்டார். மேலும் துப்பாக்கி  குண்டு சுமைலாவை தாக்கிய பின்பும் ஆத்திரம் அடங்காத சோனு துப்பாக்கியும் பின்புறத்தால் தனது தங்கை என்றும் பாராமல் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சோனுவிடமிருந்து அவரது சகோதரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புகாரின் காரணமாக சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் விரைந்து வந்து சோனுவை கைது செய்தனர்.

பின்னர் சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.