தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா?

0
35

தமிழகத்தில் இந்துத்துவா கட்சிகள் வளர அதிமுக வழி செய்கிறதா?

மறைந்த முன்னாள் முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒருபோதும் இந்துத்துவா அமைப்புகளையும், பாஜக கட்சியும் அனுமதிக்க மாட்டோம் என்று சூழரைத்தார். அவர் அப்போது பேசிய பேச்சுக்கள் கூட சமூகவலைத்தளங்களில் வீடியோவாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து சற்று முன்னேறி வெற்றி கண்டது. இருப்பினும், அதிமுக கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  திமுக கட்சி தான் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு தமிழக அதிமுக- பாஜக கட்சியுடன் மறைமுகமாகவும் நேரடியாகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சென்ற அதிமுக ஆட்சியில் தமிழகத்திலிருந்து இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜக கட்சியின் வளர்ச்சி அதிகமாகவே காணப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் இந்துத்துவா அமைப்புகளை, கட்சிகளை வலுப்படுத்த முயற்சி செய்வதாகவும், இந்துத்துவா அமைப்பை சேர்ந்த சிலருக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் பாதுகாப்பு பேரவை, பாரதிய ஹிந்து பரிவார், சிவசேனா போன்ற பல்வேறு இந்துத்துவா கட்சிகளும், இந்துத்துவா அமைப்புகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழிவகை செய்வதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டாலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருவதால் இது சாத்தியமாகுமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்

author avatar
Parthipan K