நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

Photo of author

By Parthipan K

கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில்  தஹிர் அஹ்மத் நசீர் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தன்னை முகமது நபி என்று தஹிர்  கூறியதால் தெய்வநிந்தனை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை  பெசாவர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில்  தஹிர் சுட்டுக் கொல்லப்பட்டார். தஹிரை இஸ்லாத்தின் எதிரி என கோபமாக கத்திக் கொண்டே கொன்றுள்ளார். அவரது பெயர் காலித் என தெரியவந்துள்ளது, அந்த இடத்திலேயே கைதும் செய்யப்பட்டு  நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை கொண்டு வந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.