தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

Photo of author

By Jayachithra

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

Jayachithra

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரம்பட்டியைச் சேர்ந்த கௌதமன் என்பவரின் படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது இவர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழக மீனவர்கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படை போலீஸார் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாகப்பட்டினம் மீனவர் கலைச்செல்வன் என்பவர் அதில் காயமடைந்துள்ளார். காயமடைந்த மீனவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.