5 நிமிடம் போதும் மூச்சு பிடிப்பு, முதுகு வலி, இடுப்பு வலி, வாயு தொல்லை சரியாகிவிடும்!

0
725

5 நிமிடம் போதும் மூச்சு பிடிப்பு, முதுகு வலி, இடுப்பு வலி, வாயு தொல்லை சரியாகிவிடும்!

 

குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்தாலே இடுப்பு பிடித்து விடும். பிறகு எந்த வேலையும் செய்ய முடியாத அளவிற்கு ஒரே வலியாக இருக்கும். இப்படிப்பட்ட மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லையை சரி செய்ய இந்த கைக்கொண்ட நாட்டு மருத்துவத்தை செய்து வந்தோமேயானால் ஒரே நாளிலேயே உங்களது மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை இருந்தால் நீங்கிவிடும்.

அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று இப்பொழுது பார்க்கலாம்.
அதை செய்து அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்
2. ஒரு டீஸ்பூன் சுக்கு பொடி
3. அரை டீஸ்பூன் பெருங்காய பொடி
4. கட்டிக் கற்பூரம்.

செய்முறை;

1. முதலில் நன்கு சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதை சூடு ஆற வைத்தோமேயானால் அந்த கஞ்சி தண்ணீர் கெட்டிப்பட்டு இருக்கும்.
2. அந்த கெட்டி பட்ட கஞ்சியை ஒரு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுக்கு பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
4. அரை டீஸ்பூன் பெருங்காய பொடியை சேர்த்துக் கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் இருந்தால் அது தண்ணீர் ஊற வைத்துக் கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
5. பிறகு சிறிதளவு கட்டி கற்பூரத்தை உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.
6. இந்த அனைத்து கலவையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
7. ஒரு கரண்டியில் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து சிறிதளவு சூடு படுத்திக் கொள்ளவும்.
8. இப்பொழுது இதை எந்த இடத்தில் மூச்சு பிடித்து இருக்கிறதோ? வாயு பிடித்து இருக்கிறதோ?அந்த பகுதியில் நன்றாக தடவி விடவும். இப்படி செய்யும் பொழுது ஒரே நாளில் உங்களது மூச்சு பிடிப்பு, முதுகு வலி, இடுப்பு வலி, வாயு தொல்லை சரியாகிவிடும்!

Previous articleகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்!
Next article1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது!