நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா! இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!
சுவாச மண்டல கழிவுகளை நீக்கி நுரையீரலை புதுப்பிக்கும் மூன்று இலைகளின் பயன்களை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்
சுவாச பிரச்சனைகளை மிக முக்கியமானது நெஞ்சு சளி ஆகும். இதனை இயற்கை முறையில் மூன்று இலைகளை பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை தயாரித்துக் பயன்படுத்தலாம். நம் உடலில் மிகவும் இன்றைய அமையாத ஒரு உறுப்பு நுரையீரல் ஆகும் .
காற்றில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்கின்றது மற்றும் ஓர் உயிர் ஆற்றலாக செயல்படுகிறது. நீண்ட நாள் நெஞ்சு சளி மற்றும் நாள்பட்டு வரக்கூடிய நெஞ்சு சளி ஆனது இந்த இலைகளின் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.
தும்பை இலை: தும்பை இலையானது விஷ முறிவு மருந்தாக பயன்படுகிறது மற்றும் கோழை அகற்றியாக செயல்படுகிறது. நுரையீரலின் ஆற்றலை அதிகரிக்க மிக முக்கியமாக பயன்படுகிறது.
துளசி இலை:இவை பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. துளசி இலையானது நெஞ்சு சளியை தீர்க்கும் மிக முக்கியமான மருந்தாக செயல்படுகிறது. தூதுவளை இலை:
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதனால் சுவாச பிரச்சனையானது குணமடைகிறது.
ஐந்து தும்பை இலை, ஒரு கைப்பிடி அளவு துளசி இலை ஐந்து தூதுவளை இலை மற்றும் ஐந்து மிளகு ஆகிய நான்கையும் காயவைத்து பொடி செய்து அதனை அரை லிட்டர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு நான்கு வேலையாக குடித்து வந்தால் சுவாச பிரச்சனை மற்றும் நெஞ்சு சளியானது குணமடைந்து விடும்.