மூச்சுத் திணறல் ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

0
309

மூச்சுத் திணறல் ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

தற்போது பனிக்காலம் என்பதால் ஒரு சிலருக்கு பனி சேராமல் சளி இரும்பல் மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படும். மூச்சுத் திணறல் இருந்தால் அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

மூச்சு திணறல் ஏற்பட காரணம் நம் உடலில் அதிகளவு சூடு இருந்தால் ஆக்சிஜன் அதிகளவு தேவைப்படுவதினாலும் இந்த மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதய நோய் ஏற்படுவதற்கும் அறிகுறியாக இந்த மூச்சு திணறல் இருக்கின்றது.

நீர்ச்சத்து குறைவாக இருப்பதினால் நம் உடலுக்கு அதிக அளவு நீர் தேவைப்படுவதனால் இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு வெளியில் சென்று வரும்பொழுது காற்று மாசினாலும் அலர்ஜி ஏற்பட்டு மூச்சுத் திணறலாக உருவாக வாய்ப்புள்ளது.

தேவையான பொருட்கள்:

ஒரு டீஸ்பூன் தூதுவளை இலை பொடி, பனை வெல்லம்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைக்க வேண்டும். சிறிதளவு கொதித்த உடனே தூதுவளை இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள பணவெளத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் அளவிற்கு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

ஒரு டம்ளர் அளவிற்கு குறைந்த பிறகு அதனை எடுத்து ஆற வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது குடிக்க வேண்டும். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வர மூச்சுத் திணறல் பிரச்சனை படிப்படியாக குறையும்.

மூச்சுத் திணறலை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யவில்லை என்றால் அவை ஆஸ்துமாவாக மாறிவிடும். தூதுவளை பொடியானது ஞாபக சக்தி அதிகரிக்கவும் பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கம் போன்றவை சரி செய்யவும் உதவுகிறது.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here