கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!

0
208
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருந்து விலகுவதால் தெளிவுடன் செயல்படுவீர்கள். நிதி வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாகவும் சிறப்பாகவும் நடைபெறும். கொடுக்கல் வாங்கல் அற்புதமாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்த உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்கு குழப்பம் தீரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!
Next articleமூச்சுத் திணறல் ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here