நீர்க்கட்டிகள் இருக்கின்றதா? இதோ இந்த ஒரு டிப்ஸ் போதும்!

0
198

நீர்க்கட்டிகள் இருக்கின்றதா? இதோ இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தற்போதுள்ள சூழலில் நாம் சரியான உணவு முறைகளை உட்கொள்வதில்லை மேலும் உடல்நிலை காரணமாகவும் கர்ப்பப்பை நீர்க்கட்டி உருவாகின்றது. இந்த பிரச்சனை பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனை காரணமாக நீர்க்கட்டிகள் உருவாகின்றது. அதனை எவ்வாறு எளிமையான முறையில் நீக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

இதுபோன்ற பிரச்சனைகள் நம்முடைய உணவுப் பழக்கங்கள் மூலமாகவும் வரும். நம் உடலில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளின் காரணமாகத்தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையானது 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு தான் அதிக அளவு ஏற்படுகிறது.

இந்த பிரச்சனை மன அழுத்தத்தின் காரணமாக நீர் கட்டிகள் உருவாகிறது. நீர்கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியாக மாதவிடாய்கள் சரியாக வராமல் இருப்பது தான். அதனை சரி செய்ய முளைகட்டிய தானிய வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

நீர்க்கட்டி உள்ளவர்கள் குறிப்பாக தட்டப்பயிரை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். நீர் கட்டியை போக்க மலைவேம்பு அதிக பயன்படுகிறது. இந்த மலைவேம்பினை மாதவிடாய் காலங்களாக இருக்கும் மூன்று நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் நீர்கட்டி வராமல் இருப்பதற்கு பிராய்லர் கோழி, எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். உடல் பருமன் அதிகம் இருப்பதாலும் குழந்தை பேரு கிடைக்காமல் இருக்கும்.

அதனால் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் வரும். மேலும் நாம் நீர்கட்டியை இல்லாமல் பாதுகாத்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

Previous articleசிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்!!
Next articleஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!