புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!!

0
189

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என்ற பகுதியில் வசித்து வரும் பெண் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்ஐ அப்பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு இது குறித்து உங்களுக்கு அழைப்பு விடுவதாக கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டுள்ளார்.

பின்பு இரவு நேரங்களில் எஸ்ஐ சுதாகர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். அந்தப் பெண் பேச மறுத்தாலும் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அந்த பெண் எஸ்ஐ மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் எஸ்ஐ சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தது மட்டுமின்றி வன்மையாக கண்டித்தும் உள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணின் எண்ணை பெற்றுக்கொண்டு இவ்வாறு பாலியல் தொல்லை காவல்துறையே கொடுப்பதா என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Previous articleமுன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!
Next article6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!!