6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!!

0
92
#image_title

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!!

பள்ளிகளில் சமீப காலமாக உடற்கல்வி பாட வேளையிலும் ஆசிரியர்கள் மற்ற பாடங்களை எடுப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகாரை எடுத்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பள்ளியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கட்டாயம் மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் உடற்கல்வி பாட வேலையை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்குவதை விட வேண்டும் என்றும் அதற்கு மாறாக அவர்களது பாட வேலையை தரலாம் எனவும் கூறினார்.

தற்பொழுது ஆசிரியர்கள் தங்களின் வேலைகள் குறித்து அனைத்து தரவுகளையும் எமிஸ் இணையதளத்தில் தான் பதிவு செய்து வருகின்றனர். மேற்கொண்டு பள்ளிக்கல்வித்துறையும் பாடத்திட்டங்களை ஒதுக்குதல் என அனைத்தையும் இந்த இணையத்திலேயே பதிவு செய்து விடுகிறது.

அந்த வகையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கலையை ஊக்குவிக்கும் வகையில் இசை ஓவியம் போன்ற பாட வேலைகள் ஒதுக்கப்பட்டது. இதில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.

ஆனால் தற்போதைய ஆண்டில் ஓவியம் தையல் இசை போன்றவற்றிற்கு எந்த ஒரு பாட வேலையும் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து கேட்டபொழுது, நன்னெறி கல்வி பாட வேலையை ஓவிய வகுப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினர்.

ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. எனவே இது குறித்து கலையாசிரியர் நலச் சங்கம் மாநில தலைவர் ராஜ்குமார் கூறியிருப்பதாவது, பாடப் புத்தகங்களை தாண்டியும் பல மாணவர்களுக்கு கலைமீது அதிக ஆர்வம் உள்ளது.

அதனை வளர்க்கவும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இவ்வாறான பாட வேளைகள் அமைக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையானது மற்ற பாடங்களுக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கிறதோ அதே போல இதற்கும் அளிக்க வேண்டும். இவ்வாறு அலட்சியப் போக்காக நடந்து கொள்வது கலை துறையின் மேல் உள்ள நாட்டம் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

அது மட்டும் இன்றி பல வருடங்களாக இதற்கென்று புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த கோரியும் தற்பொழுது வரை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.