அதற்கு மறுத்த சில்க் ஸ்மிதா.. திமிர் பிடித்த பெண் என்று சொன்ன சிவாஜி..? என்ன நடந்தது அன்று!

0
337
#image_title

அதற்கு மறுத்த சில்க் ஸ்மிதா.. திமிர் பிடித்த பெண் என்று சொன்ன சிவாஜி..? என்ன நடந்தது அன்று!

இந்திய திரையுலகில் 80, 90 கால கட்டத்தில் கவர்ச்சிக்கே டப் கொடுக்கும் நடிகையாக வலம் வந்தவர் சில்க். அவரது கண்ணை பார்த்தாலே போதை ஏறும் என்று சொல்லும் அளவிற்கு ஆண் ரசிகர்களை தனது கவர்ச்சியான நடிப்பால் கட்டி போட்டவர். ஐட்டம் டான்ஸ்க்கு சில்க்கை தவிர வேறு யாராலும் அவ்வளவு அழகாக நடனம் ஆட முடியாது. கவர்ச்சி நடிகை என்றால் என்றும் சில்க் மட்டுமே என்று அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ரசிகர்கள் அவரை கொண்டாடித்தான் வருகின்றனர்.

பழம்பெரும் நடிகர் வினு சக்கரவர்த்தி அவர்கள் சில்க்கின் கண் அழகில் மயங்கி அவருக்கு “வண்டிச்சக்கரம்” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். தமிழில் இவருக்கு முதல் படம் என்றாலும் தனது கவர்ச்சியான நடிப்பு, நடனத்தால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வளர்ந்த நடிகைகளுக்கே டப் கொடுத்தார். இதனை தொடர்ந்து மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானர்.

சில்க் என்றால் கவர்ச்சி என்ற நிலை மாறியதால் இயக்குநர்கள், தயரிப்பாளர்கள், நடிகர்கள் அவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க போட்ட போட்டி போட்டனர். சில்க் ஒரு சீனில் வந்தாலே அந்த படம் வெற்றி தான் என்ற எண்ணம் ஓடிய காலம் அது. இதனால் சில்க்கின் கால்ஷீட்டுக்காக பலரும் காத்திருந்தனர். அந்த அளவிற்கு சில்கிற்கு மவுசு கூடியது.

ஒருபுறம் புகழின் உச்சிக்கு சென்ற சில்கிற்கு மறுபுறம் அச்சுறுத்தலும் ஏற்படத் தொடங்கியது. படத்தில் கவர்ச்சி காட்டும் அவர் நிஜத்தில் அதற்கு ஆப்போசிட் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றி கூறி இருக்கின்றனர். சில்க்கை சுற்றி ஆண்கள் கூட்டம் ஈக்கள் போல் மொய்க்க தொடங்கவே அவர் தன்னை காத்துக்கொள்ள கம்பீரமான பெண்ணாக காட்டிக் கொள்வராம்.

பட சூட்டிங்கில் யாரிடமும் அதிகம் பேசமாட்டாராம். நாம் பேச ஆரம்பித்தால் அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தம்மிடம் நெருங்கி விடுவார்கள் என்ற ஒரு பயம் அவரிடத்தில் இருந்ததால் அனைவரிடமும் திமிராகத் தான் பேசுவாராம். அதனையே தனது பாதுகாப்பு கவசமாக மாற்றிக் கொண்டார் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெருவிக்கின்றனர்.

மூத்த நடிகர்கள், இளம் நடிகர்கள் என்று யாரையும் மதிக்க மாட்டார் என்ற விமர்சனமும் சில்க் மீது அப்போது எழுந்தது. இதற்கு சான்று சிவாஜியே.

நடிகர் திலகம் சிவாஜி தமிழ் திரையுலகில் சீனியர் நடிகர். சக நடிகர்கள், ரசிகர்கள் அவரைக் கண்டாலே அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள். இப்படி பட்டவரை சில்க் அவமதித்தாக ஒரு நிகழ்வு இன்று வரை உலா வந்த வண்ணம் இருக்கிறது.

சிவாஜி அவர்கள் ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்று இருக்கிறார். அப்பொழுது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து இருக்கின்றனர். ஆனால் அந்த விழாவிற்கு வந்த சில்க் மட்டும் எழுந்து நிற்கவில்லை. அருகில் இருந்தவர்கள் சில்க்கை எழ சொல்லி கட்டாயப்படுத்தியும் அவர் எழுந்திருக்காததை சிவாஜி கவனித்து இருக்கிறார். பின்னர் தன்னுடன் வந்தர்வர்களிடம் சில்க் ஸ்மிதா திமிர் பிடித்த பெண் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்பொழுது தான் அவர் திமிரை பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். சில்க்கின் செயல் மற்றும் சிவாஜியின் பேச்சு அந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட், உண்மையில் அவர் சிவாஜியை அவமதிக்கவில்லை என்று திரைத்துறைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்து இருக்கிறார். சிவாஜியை பார்த்து சில்க் எழாமல் இருந்ததற்கு காரணம் அவர் ஒரு படத்தின் நடனக் காட்சிக்கு ஆடி முடித்துவிட்டு ஆடையை மாற்றாமல் அதே ஆடையில் வந்திருக்கிறார். ஒருவேளை தாம் எழுந்து நின்றால் அனைவரது கண்களும் தம் மீது தான் இருக்கும். சிவாஜியை பார்க்க மாட்டார்கள் என்று எண்ணி தான் அவர் அவ்வாறு செய்தார். தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் என்று விழா முடிந்த பின் சிவாஜியிடம் அவர் கூறி மன்னிப்பு கேட்டார். சிவாஜியும் அதை புரிந்து கொண்டு பரவயில்லை, உங்கள் நிலை புரிகிறது என்றும் கூறினார் என திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறி இருக்கிறார்.