நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல்

Photo of author

By Savitha

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல்

Savitha

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல்

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்து வெளியாகிய 10 தல திரைப்படம் காட்சி இடப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்களை திரையரங்கினுள் அனுமதிக்காமல் இருந்ததற்கு பெரும் கண்டனங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வந்த நிலையில்.

கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்களை இலவசமாக 10 தல படத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட தலைவர் செல்வம் ஏற்பாட்டின் பேரில் இலவசமாக திரைபடம் பார்க்க அனுமதிக்கபட்டனர்.

மேலும் திரையரங்கம் என்பது அனைவருக்கும் சமம் என்றும் ஆகையால் யாரையும் ஒதுக்ககூடாது என்பதை உணர்த்தவே ஏற்பாடு செய்ததாக சிம்பு ரசிகர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தற்போது அது வைரல் ஆகிவருகிறது.