சின்ன வயதில் முதல்முறையாக ஒரு பெண்ணை ஆசையா காதலித்த சிம்பு – வெளியான தகவல்!

0
145
#image_title

சின்ன வயதில் முதல்முறையாக ஒரு பெண்ணை ஆசையா காதலித்த சிம்பு – வெளியான தகவல்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பு மட்டுமல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கி வருகிறார். இவர் பிரபல இயக்குநர் டி.ராஜேந்திரனின் மூத்த மகன்.

டி.ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் சிம்புவுக்கு ஒரு வயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். இதனையடுத்து, தமிழில் முதல்முறையாக ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்பு ஹீரோவாக அறிமுகமானார்.

இதனையடுத்து, ‘தம்’, ‘அலை’, ‘கோவில்’, ‘குத்து’, ‘மன்மதன்’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் முதன் முதலாக நயன்தாராவை காதலித்தார். இவர்கள் இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி பெரும் வைரலானது. இதன் பிறகு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர்.

இதற்கு முன்பே சிம்புவிற்கும், பிரபல நடிகர் மகளுக்கும் காதல் இருந்ததாகவும், அந்த காதல் பிரேக்கப் ஆனதாக சொல்லப்பட்டது. இதன் பின் சிம்பு ஹன்சிகாவுடன் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் சில மாதங்களில் முறிவுக்கு வந்தது.

இந்நிலையில், சிம்புவுக்கு 10வது படிக்கும்போதே காதல் தோல்வி அடைந்ததாக தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சிம்பு பள்ளியில் படிக்கும்போது அவரின் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருப்பார்களாம். வீட்டை விட்டே சிம்புவை எங்கையும் வெளியே அனுப்ப மாட்டாங்களாம்.

சாந்தோம் ஸ்கூலில் சிம்பு 10வது படிக்கும்போது, பக்கத்து பள்ளியில் பிளஸ் டூ படித்த ஒரு பெண் சிம்புவிடம் நட்பாக பழகியுள்ளார். அந்த பெண் ஒருமுறை அவரின் ஸ்கூல் கல்ச்சுரல் நிகழ்ச்சிக்கு சிம்புவை அழைத்துள்ளார். ஆசையோடு சிம்பும் சென்றுள்ளார். அப்போது, ‘இவர்தான் என் பாஃய் பிரண்ட் என்று ஒருவரை சிம்புவுக்கு அறிமுகம் செய்தாராம். இதைப் பார்த்த சிம்பு தன் காதலை நினைத்து கண்ணீர் விட்டாராம். இன்று வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

Previous article40 வயது ஆனால் ஆன்ட்டி என்று அழைப்பதா!!? கோபத்துடன் கருத்து தெரிவித்த ஜவான் பட நடிகை!!!
Next articleஜோதிகாவை பார்த்து ரஜினி கணித்து சொன்ன ஒரு வார்த்தை – அப்படியே நடந்ததாம்!