சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் லிஸ்ட்… 12 வருடத்துக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2!

0
308

சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் லிஸ்ட்… 12 வருடத்துக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை முடித்தக் கையோடு இப்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்கு மூலமாக பெரிய லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும், ஓடிடி மற்றும் சேட்டிலைட் மூலமாக பெரிய லாபம் சம்பாதித்து தப்பித்தது.

இந்த படத்துக்கு பிறகு இன்னும் சிம்பு புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே ஒத்துக்கொண்ட ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதையடுத்து சிம்பு எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் சிம்பு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சிம்பு அதன் பிறகு அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த படத்தில் நடிக்க சிம்பு சம்மதம் சொல்லிவிட்டதாகவும், அந்த படம் விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

இதே போல சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleதுணிவு படத்தில் அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதா? வெளியான தகவல்!
Next articleநயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here