ஒற்றைத்தலைவலிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! இதோ நிரந்தர தீர்வு!!
தலைவலியானது முறையாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும் ஆக்சிஜன் சரிவர கடத்தப்படாமல் இருந்தாலும் வந்துவிடும். அதிலும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களால் அதிகப்படியான வெளிச்சம் போன்றவற்றை பார்க்க இயலாது. அதனையெல்லாம் பார்த்தாலே உடனடியாக அவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்துவிடும்.
ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்:
ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்து விட்டால் ஒரு பக்கம் முகம் தலை போன்றவையில் வலி ஏற்படும்.
அதேபோல குறிப்பிட்ட சில தினங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் வலி உண்டாகும்.
இந்த ஒற்றைத் தலைவலி வருபவர்களால் சரிவர சாப்பிட முடியாது.
அதுமட்டுமின்றி ஒற்றைத் தலைவலி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் பார்வையில் சிறு மாற்றம் போன்றவை காணப்படும்.
ஒற்றைத் தலைவலி சரி செய்யும் முறை:
ஒற்றைத் தலைவலி வந்தவுடன் வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டிகளை எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் மைக்ரின் பிரச்சினை குணமாகுவதாக ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.
அதேபோல டீ காபி அருந்துபவர்கள் ஒற்றைத் தலைவலி வந்தவுடன் அதனை எடுத்துக்கொள்ளக்கூடாது.அவ்வாறு குடிப்பதால் மேற்கொண்டு வாந்தி மயக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஒற்றை தலைமையால் அவதிப்படும்போது அதிகப்படியான வெளிச்சத்தை அச்சமயத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக டிவி செல்போன் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.
மின்விளக்குகளை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார் இந்த ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலி ஏற்படும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு மாறாக நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.
ஒற்றைத் தலைவலி படிப்படியாக குறைய வேண்டும் என்றால் கட்டாயம் தினசரி உணவில் பச்சை நிறம் உள்ள காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை எல்லாம் பின்பற்றினாலே ஒற்றைத் தலைவலிவில் இருந்து விடுபட்டு விடலாம்.