சிம்பிள் ரெசிபி.. 10 நிமிடத்தில் வாய்க்கு ருசியாக தக்காளி சாதம் செய்யும் முறை!!

0
79
#image_title

சிம்பிள் ரெசிபி.. 10 நிமிடத்தில் வாய்க்கு ருசியாக தக்காளி சாதம் செய்யும் முறை!!

சமையலில் தக்காளியின் பங்கு இன்றியமையாதது.இந்த தக்காளியை கொண்டு பல்வேறு உணவுகள் செய்யப்படுகிறது.தக்காளி தொக்கு,சட்னி,தக்காளி பிரியாணி என்று உணவு பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.தக்காளி சிறிதளவு இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட உணவு பொருளாகும்.இந்த தக்காளியில் சுவையான தாளித்த சாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வடித்த சாதம் – 1 பெரிய கப் அளவு

*தக்காளி – 5 (நறுக்கியது)

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)
அல்லது
சிறிய வெங்காயம்

*உப்பு – தேவையான அளவு

*கருவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*பச்சை மிளகாய் – 3(நறுக்கியது)

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1/4 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிக்க விடவும்.

2.பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

3.அதன் பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.

5.தக்காளி நன்கு வெந்து வந்த பின்னர் உப்பு சேர்த்து இறுதியாக வாசனைக்காக கொத்தமல்லி தலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

6.பின்னர் வடித்து எடுத்து வைத்துள்ள சாதத்தை அதில் போட்டு மெதுவாக கிளறவும்.

Previous articleமுகப் பருக்கள் நீங்க சிறந்த எளிய வழிகள்.. சில நாட்களில் தீர்வு நிச்சயம்!
Next articleநீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!