இன்றைய சூழலில் முதுகு வலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ளது. பெரியவர்களுக்கு வயதாவதினாலும், இளம் வயதினருக்கு நீண்ட நேரம் உக்கார்ந்தபடி வேலை பார்ப்பது, இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பிரயாணம் செய்வது, குண்டும், குழியுமான சாலைகளில் பயணிப்பது போன்றவையும் காரணிகளாகும். பெண்களுக்கு, கர்ப்ப காலங்களிலும், வேலை காரணமாக நீண்ட நேரம் நிற்பது, உடல் பருமன் போன்றவை காரணங்களாகும்.
நாமும் இந்த முதுகு வலியை போக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டாலும், எதையும் சரிவர செய்திருக்க மாட்டோம். இப்போது நாம் மிகவும் எளிய முறையில் முதுகுவலி போவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
இதற்கு நமக்கு தேவை மூன்று பொருட்கள் மட்டுமே. சாதம் வடித்த தண்ணீர் 1 டம்ளர், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1டேபிள் ஸ்பூன் இந்த மூன்று பொருட்கள் இருந்தாலே முதுகு வலிக்கு நிவாரணம் பெறலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி சூடுபண்ணி கொள்ளவும் பின்னர் அதில் 1 ஸ்பூன் தேனை ஊற்றி கலந்து கொள்ளவும். அதனுடன் சீரகத்தையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முதுகுவலி குணமாவது உங்களுக்கே தெரியும்.