மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!

0
215
functions-of-liquor-vending-machine-the-definition-released-by-tasmac
functions-of-liquor-vending-machine-the-definition-released-by-tasmac

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!

சென்னையில் 4 மால்களில் உள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, நான்கு மால்களில் (Mall Shop) மதுபான சில்லறை விற்பனை கடைகளில், கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவும் நடவடிக்கைகள் உள்ளது. இந்த தானியங்கி இயந்திரத்தின் மூலம் சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.

தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால், இதன் மூலம் நடைபெறும் விற்பனைகள் அனைத்தும் கடையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் மூலம்  நடைபெறுமாறு நிறுவப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையில் விற்பனை நடைபெறுவதால் 21 வயது குறைவானவர்களுக்கு மது விற்பனை கிடையாது.

கடைகளின் பணி நேரமான  நண்பகல் 12 மணி  முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தை பயன்படுத்தமுடியும். இந்த இயந்திரம் கடைகளுக்கு உள்ளே உள்ளதால் நுகர்வோர் மட்டுமே அணுகமுடியும். இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த இயந்திரம் எப்படி இயங்குகிறது.

முதலில் தானியங்கி இயந்திரத்தில் உள்ள மதுபான வகையை தேர்வு செய்ய வேண்டும். அதில் கடைகளில் உள்ள அனைத்து மதுபான வகைகளும் காண்பிக்கப்படும். அதில் ஒன்றை தேர்வு செய்யவும். பிறகு அதன் தொகை காண்பிக்கப்படும். அத்தொகையை, தொகை செலுத்தும் பகுதியின் வழியாக செலுத்த வேண்டும். தொகை சரிபார்க்கப்பட்ட பிறகு மதுபாட்டில் கீழே உள்ள பகுதி வழியாக கொடுக்கப்படும்.

 

author avatar
CineDesk