- முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது. ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எப்படி அமர்கின்றோம், எப்படி நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம் என எல்லாமே முதுகுடன்[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
தொடர்புடையதுதான். நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்திருக்கும் வேலை செய்யும் எல்லோரும் இருக்கும் பிரச்னை முதுகுவலி.
முதுகுவலியைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி பார்ப்போம்…
*நாம் தூங்கும் படுக்கை கூட முதுகுவலி வருவதற்கு காரணமாக இருக்கலாம். முதுகெலும்பை வளைக்காமல் நேராக படுக்க வேண்டும். சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும்.
*கீழ் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.
*அதிகப்படியான உடல் பருமன் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் சமச்சீரின்மை போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் மூட்டு வலி, முதுகு வலியையும் ஏற்படுத்தியது. எனவே, உடல் எடையைக் குறைப்பது, கட்டுக்குள் வைப்பதன் மூலம் மூட்டு வலி, முதுகுவலி வராமல் தடுக்கலாம்.
*வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான நீரில் குளிப்பது நல்லது.
*பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை நம் அன்றாட உணவில் சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*முதுகுவலி மிகத் தீவிர பிரச்னையாகும் வரை காத்திருக்க வேண்டாம். தொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனை பெறுவது நல்லது.