திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!

Photo of author

By Divya

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!

இன்றைய காலத்தில் உரிய வயதில் திருமணம் நடப்பது என்பது எளிதற்ற காரியமாக இருக்கிறது. இதற்கு தோஷம், வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது. இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இந்த பரிகார பூஜையை இதுவரை திருமணம் ஆகாத நபர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். அப்பொழுது தான் முழு பலன் கிடைக்கும்.

திருமண யோகம் கூடி வர பரிகாரம்:-

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள்

*குங்குமம்

*வெற்றிலை

*பாக்கு

பரிகாரம் செய்யும் முறை…

முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சிவன் பார்வதி ஒன்றாக இருக்கும் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும். இந்த திருவுருவப்படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைத்து தீபம் ஏற்றி வைக்கவும்.

பின்னர் சிவன் பார்வதி படத்திற்கு முன் ஒரு மனை அல்லது சுத்தமான காட்டன் துணி போட்டு அமருங்கள். அடுத்து ருத்ராட்ச மாலை அல்லது வேறு ஏதேனும் மாலை ஒன்றை கையில் எடுத்து கொள்ளுங்கள்.

“காமேச பக்த மாங்கல்ய ஸுத்ர சோபித காந்தாரா”

என்ற மந்திரத்தை உச்சரியுங்கள். தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முதல் நாளில் எந்த நேரத்தில் பரிகாரம் செய்ய தொடங்கினீர்களோ அதே நேரத்தில் தான் அடுத்த 47 நாட்களுக்கும் செய்ய வேண்டும். பரிகாரத்தின் இறுதி நாளில் சுமங்கலி பெண்கள் 3 பேரை அழைத்து வெற்றிலை, பாக்கு தாம்பூலங்களை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் திருமண யோகம் கூடி வரும்.