பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

Photo of author

By Divya

பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டு பூஜை அறையில் எலுமிச்சை தோலில் தீபம் ஏற்றி வைத்தால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் அகலும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை – 1

*மஞ்சள், குங்குமம் – சிறிதளவு

*திரி – 1

*கிராம்பு – 2

*நெய் – தேவையான அளவு

பரிகாரம் செய்வது எப்படி?

முதலில் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்கு செல்லவும்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கால் படாத இடத்தில் பிழிந்து விடவும்.

பின்னர் ஒரு பாதி எலுமிச்சை தோலில் மஞ்சள் குங்குமம் சேர்த்து கொள்ளவும். மீதமுள்ள எலுமிச்சை தோலில் மஞ்சள் குங்குமம் சேர்த்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.

அடுத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றி பஞ்சத் திரி போடவும். பிறகு எடுத்து வைத்துள்ள கிராம்பை அதில் சேர்த்து தீபம் ஏற்றவும்.

பிறகு நீங்கள் யாருக்காவது பணம் கொடுத்திருந்தாலோ அல்லது உங்களுக்கு பணத் தேவை இருந்தாலோ மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

இந்த தீபம் ஏற்ற நாள், கிழமை பார்க்கத் தேவையில்லை. எத்தனை நாள் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கணக்கும் கிடையாது. உங்களுக்கு எப்பொழுது விளக்கு ஏற்ற விருப்பமோ அப்பொழுது செய்தால் போதும். இவ்வாறு விளக்கேற்றுவதன் மூலம் உங்கள் எண்ணங்கள், தேவைகள் உடனடியாக நிறைவேறும்.