உச்சத்தை எட்டிய சீன – ஆஸ்திரேலிய மோதல்

Photo of author

By Parthipan K

ஆஸ்திரேலியா-சீனா இடையே கொரோனா வைரஸ் தொடங்கி பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது.  சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித்தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் ஆஸ்திரேலியாவை
சேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தது. கைது செய்யப்பட்ட ஷேங் லி-யை விடுதலை செய்யவேண்டும் என ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக உங்களிடம் சில விசாரணை நடத்தவேண்டும் ஆகையால் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி 2 பத்திரிக்கையாளர்களுக்கும் சீன அரசு கோரிக்கை விடுத்தது. இந்த அனுமதியையடுத்து தூதரக உதவியுடன் சீனாவில் இருந்து தப்பித்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகிய 2 பத்திரிக்கையாளர்களும் நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இந்த சம்பத்தை தொடர்ந்து சீனாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.